News:
அழகிரி படத்தை மறைத்த தி.மு.க., தொண்டர்கள்: ""அவசர அவசரமா மூடி மறைச்சிருக்காங்க...'' என வந்தவுடன் விவாதத்தை துவக்கினார் அந்தோணிசாமி. ""அதான் உங்களுக்கு தெரிஞ்சிருச்சே... அப்புறம் மறைச்சு என்ன வே பயன்...'' என்று கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி. ""சமீபத்துல துணை முதல்வர் ஸ்டாலின் திருச்சி போயிருந்தாரேங்க... அவர் திரும்பும் போது, ரோடு வழியே கார்ல போயிடலாம்ன்னு திடீர்ன்னு முடிவு ஆகியிருக்கு... விஷயத்தைக் கேள்விப்பட்டதும், வழியில் இருக்கற மாவட்ட நிர்வாகிகள் வரவேற்க அவசர ஏற்பாடுகளை செய்தாங்க...
""கடலூர் மாவட்டத்துல அமைச்சரோட ஆதரவாளர்கள், முதல்வர் பிறந்த நாளை ஒட்டி வழியெங்கும் முதல்வர், துணை முதல்வர், அழகிரின்னு மூணு பேரோட பேனர்களை வச்சிருந்தாங்க... அந்த வழியாத் தான் துணை முதல்வர் வர்றாருன்னு தகவல் கிடைச்சதும் டென்ஷனாகிட்டாங்க...
""உடனே போய், ஏற்கனவே வச்சிருந்த பேனர்களில் அழகிரியோட படத்தை மறைக்கிற விதமா, அவர் படத்து மேல, திரும்பவும் இன்னொரு ஸ்டாலின் படத்தை வைச்சு சமாளிச்சிருக்காங்க...
அவசர அவசரமா சொந்த கட்சிக்காரங்களே, அழகிரி படங்களை மறைக்கிறதைப் பார்த்த போலீஸ்காரங்க, திகைச்சு போயிட் டாங்கங்க... ரகசியமா எல்லா வேலையும் முடிச்ச பிறகு தான், அந்த மாவட்ட உடன்பிறப்புகள் திருப்தியானாங்களாம்...''
Good Comment by a Reader :
அண்ணன் தம்பி சண்டை ஆரம்பிச்சுடுச்சு !!! மதுரைல அடுத்து ''எரிக்க போறது யாரு?'' ...காண தவறாதீர்கள் ! மக்களாட்சி மலர ஒட்டு போட்ட மக்களுக்கு...குடும்ப ஆட்சியின் ''கும் கும் மம்'' வாங்கி விட்டீர்களா........! தினம்தோறும் பார்க்க தவறாதீர்கள் கோபால் பல்பொடி வழங்கும், குடும்ப உர்பினர்கள் ஆவேசமாக நடிக்கும்- ''எங்களுக்கும் பதவி வேணும் தாத்தா'' !!! அணைத்து காமெடிகளையும் சுட சுட காண பாருங்கள் ''கலைஞர் செய்திகள் '' (சிரிபொலி சேனலை மீறிய சிரிப்பு செய்திகள் ) ! உங்கள் இலவச வண்ண தொல்லை கட்சியில் மட்டுமே...(கேபிளுக்கு காசு உண்டு, கரண்ட் சப்பளை கிடையாது....எங்களுக்கு தமிழ்நாடு தவிர வேறு ''கிளைகள்'' கிடையாது) !!! வாழ்க சிரிப்பு ஜனநாயகம்
Thursday, June 18, 2009
அண்ணன் தம்பி சண்டை ஆரம்பிச்சுடுச்சு :A Good Comment by a Reader
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment